வைரலாகும் போலி வீடியோ!
Posted on 22/12/2020
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஜார்ஜ் ஃபோர்மென் இணைந்து இந்திய திரைப்பட பாடலை பாடியதாக கூறி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவுடன் பதிவுகளையும் ஆய்வு செய்ததில் அவை முழுக்க தவறான ஒன்று என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது அமெரிக்காவில் பிறந்த பாலிவுட் பாடகர் ஜெப்ரி இக்பால் ஆகும். மற்றொருவர் கேரளாவை சேர்ந்த தப்லா இசைக்கலைஞர் ஜோமி ஜார்ஜ் ஆகும்.