சேதன் ஷர்மா புதிய தேர்வுக்குழு தலைவராக பரிந்துரை!

சேதன் ஷர்மா புதிய தேர்வுக்குழு தலைவராக பரிந்துரை!

அகமதாபாத் நகரில் நடைபெற்ற பிசிசிஐயின் 89ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், இந்திய அணிக்கு மூன்று புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக சேதன் ஷர்மா, அபே குருவில்லா மற்றும் டெபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஜித் அகார்கர் உட்பட மொத்தம் 11 பேர் புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிட்ட நிலையில், இவர்களை கிரிக்கெட் ஆலோசனை குழுத் தலைவர் மதன் லால், ருத்ரா பிரதாப் சிங் மற்றும் சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் காணோலி மூலம் நேர்காணல் நடத்தினர்.

இதில், மதன் லால் தலைமையிலான குழுவினர் சேதன் ஷர்மாவை வயது மூப்பு அடிப்படையில் தேர்வுக்குழு தலைவராக தேர்ந்தெடுத்து பிசிசிஐக்கு பரிந்துரைத்துள்ளனர்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top