ராஜ்ய சபா உறுப்பினர் ஆகிறார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி?

ராஜ்ய சபா உறுப்பினர் ஆகிறார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி?

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, மிக விரைவில் இந்தப் புதிய பொறுப்பை ஏற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சௌரவ் கங்குலி அல்லது அவரது மனைவி டோனா கங்குலி குடியரசுத் தலைவரின் நியமன உறுப்பினராக ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை அன்று சவுரவ் கங்குலி வீட்டிற்குச் சென்று இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதையடுத்து இந்த ஊகங்கள் எழுந்துள்ளன. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதையடுத்து கங்குலியோ அல்லது அவரது மனைவியோ மாநிலங்களவை உறுப்பினராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இம்மாத இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், நியமன உறுப்பினர் பதவிக்கு கங்குலியை மத்திய அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. நியமன உறுப்பினராக, கங்குலி அறிவிக்கப்படும்பட்சத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான அனைத்து அதிகாரங்கள் மற்றும் சலுகைகளும் அவருக்கு கிடைக்கும்.
 
கங்குலியின் மனைவி டோனா கங்குலி ஒரு ஒடிசி நடனக் கலைஞர் இதனால் இவருக்கும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக, வங்காளத்தைச் சேர்ந்த ரூபா கங்குலி மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோர் குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினர்களாக ராஜ்ய சபாவுக்குச் சென்றுள்ளனர். ராஜ்ய சபாவில் 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளுடன் தொடர்புடையவர்களும் இந்த நியமனத்தில் அடங்குவர். சவுரவ் கங்குலி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பாஜக என்று அனைத்து கட்சிகளுடனும் நட்புறவு பாராட்டுபவர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பர்சனலாக கங்குலிக்கு நன்றாகத் தெரியும்.
 
முன்னாள் மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரும் மூத்த சிபிஐ(எம்) தலைவருமான அசோக் பட்டாச்சார்யாவுடன் சவுரவ் கங்குலிக்கு ஆழமான உறவுகள் இருந்ததை அனைவரும் அறிவர். இதேபோல், மூத்த பாஜக தலைவர் அமித் ஷாவுடனும் நல்லுறவு உள்ளது. அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று சவுரவ் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அவர் மனைவி டோனா சனிக்கிழமையன்று, கங்குலி அரசியலுக்கு வந்தால் நன்றாகச் செயல்படுவார் என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top