சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது!

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் ஆகியோரை இறுதி செய்து ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஒரு சதம் உள்பட 176 ரன்களும் எடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார்.
 
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி இரட்டை சதம் உள்பட 333 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.
 
வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி 2-வது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top