நாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை - கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்

நாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை - கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்தோடுதான் ஒட்டல்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக எம்எல்ஏ-க்கள் பலர், சில அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் தனியா‌ர் சொகுசு விடுதியில் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பப்படிதான் ஒட்டல்களில் தங்கியுள்ளனர் என தெரிவித்தார்.
 
சசிகலாவுடன் 10 மூத்த அமைச்சர்கள், இரவு 7.30க்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் சசிகலா தலைமையில் ஆட்சி அமையும் என கூறிய அவர், கட்டாயப்படுத்தி எம்எல்ஏ-க்களிடம் கையெழுத்து பெற்றனர் என்பது உண்மையல்ல எனவும் தெரிவித்தார்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top