நாடா புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

நாடா புயல் நாளை அதிகாலை  கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவான நாடா புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்குவதால் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாடா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 270 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. நாடா புயல் நெருங்கி வருவதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

நாடா புயல் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்குப் பின்பு வங்கக் கடலில் தற்போது நாடா புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் புயலாக மாறியது.

சென்னையில் மழை நாடா புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 270 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் நகர் பகுதிகளிலும், சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் குளிர் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

புயல் வலுவிழக்கும் நாடா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கூறினார். புயல் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

நாளை அதிகாலை கரையைக் கடக்கும் நாடா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 270 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வேதாரண்யம் மற்றும் கடலூர் இடையே புயல் அதிகாலையில் கரையை கடக்கும் எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நாடா புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசிவருவதையடுத்து துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டன. பாம்பன் கடல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதனால் துறைமுகத்தில் காலையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் மாலையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல் சென்னை, எண்ணூர் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மணிக்கு 60 முதல் 100 கி.மீ. வேகத்திற்கு பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மீட்புக்குழு கனமழை, வெள்ளப்பாதிப்பினால் கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோல் வெள்ளச்சேதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலூர் அருகே புயல் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் 40 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் நாகை மாவட்டத்திற்கு சென்றடைந்துள்ளனர். 

Tags: News, Lifestyle, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top