டி.ராஜேந்தர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: கார் ஓட்டுனர் கைது

டி.ராஜேந்தர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: கார் ஓட்டுனர் கைது

சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி ஒருவர் நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே காவலாளி மீது கடந்த வெள்ளிக்கிழமை கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் டி.ராஜேந்தருக்கு சொந்தமானது என்றும் விபத்தை ஏற்படுத்தியது அவரது ஓட்டுநர் செல்வம் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்வத்தை கைது செய்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
விபத்து நடந்தபோது டி ராஜேந்தர் குடும்பத்துடன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் விபத்து நடந்தவுடன் நடிகர் டி ராஜேந்தர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த நபருக்கான மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்தார். கார் ஓட்டுனரும் உடனடியாக சரணடைந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top