இந்து கடவுள் புகைப்படம் இருந்த பேப்பரில் சிக்கன் விற்பனை - உத்தரபிரேதசத்தில் இஸ்லாமியர் கைது!

இந்து கடவுள் புகைப்படம் இருந்த பேப்பரில் சிக்கன் விற்பனை - உத்தரபிரேதசத்தில் இஸ்லாமியர் கைது!

இந்து கடவுள் புகைப்படம் அச்சிடப்பட்ட நாளிதழில் சிக்கன் விற்பனை செய்த இஸ்லாமியரை உத்தரபிரேசத்தில்  போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தலிப் ஹூசைன் என்பவர் பல ஆண்டு காலமாக சிக்கன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் சிக்கனை எப்போதும் போல் விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தினசரி நாளிதழ்களில்  மடைத்து சிக்கனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நாளிதழ்களில் இந்து கடவுள்களின் படங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர் அந்த படத்தை புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பியுள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துளனர்.இந்த சம்பவம் தொடர்பாக தலிப் ஹூசைனின் சிக்கன் கடைக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் எப்பொழும் போல் தான் சிக்கன் வியாபாரம் செய்வதாகவும், எந்த மதத்தையும் அவமதிக்கும் தவறான நோக்கம் எனக்கு இல்லையென கூறியுள்ளார். 
 
மேலும் அருகில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து நாளிதழ்கள் வாங்கி அதில் சிக்கனை மடைத்து விற்பனை செய்வதாகவும் போலீசாரிடம்  தெரிவித்துள்ளார். இருந்து போதும் போலீசார் விசாரணைக்கு காவல்நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். அப்போது  தலிப் ஹூசைனுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தலிப் ஹூசைன் கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து தலிப் ஹூசைனை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதம், இனத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்கவித்தல்,வேண்டுமென்றே மத உணர்வுகளை அவமதித்து பிரச்சனையை ஏற்படுத்துதல், கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தலிப் ஹூசைனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
 
ஏற்கனவே நுபர் ஷர்மா பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெய்லர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தநிலையில் இந்து கடவுள் புகைப்படம் இருந்த பேப்பரில் சிக்கன் விற்பனை செய்ததாக இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top