தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று கூறினார்.
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ்1 , பிளஸ்2 , 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு  நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்து முடிந்துள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கு தேர்வு முடிந்துவிட்டன. இன்னும் சில பாடங்களுக்கான தேர்வு மட்டும் இந்த மாதம் இறுதியில் முடிகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
 
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான  காலை சிற்றுண்டி திட்டம் சில மாவட்டங்களில் வரும் கல்வியாண்டியில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான முன்னேற்பாடுகளும்  வேண்டியிப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 4 வது வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே இன்று பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top