தங்க கடத்தல் வழக்கில் தொடர்பா? பினராயி விஜயன் மறுப்பு!

தங்க கடத்தல் வழக்கில் தொடர்பா? பினராயி விஜயன் மறுப்பு!

ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். 
 
ஆனால் தற்போது அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறி கேரள அரசியலை புறட்டிப்போடும் சில தகவல்களை அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, தங்க கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது. 
 
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரள அரசியலில் இது பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 
 
அவர் கூறியதாவது, தங்கம் கடத்தல் வழக்கு வெளியானதும் விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியிருந்தது. அரசியல் காரணங்களால் எங்கள் மீது சில குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகின்றன. இது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் லாபம் ஈட்ட முயற்சிப்பவர்களுக்கு கேரள சமூகம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top