200 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறதா ரிசர்வ் வங்கி?

200 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறதா ரிசர்வ் வங்கி?

ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு புழக்கத்தில் விட உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மக்கள் வங்கிகளின் வாசல்களில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். கையில் உள்ள பணம் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் 100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பை அடுத்து, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்றுவது இன்று வரை பெரிய பிரச்சனையாகவே உள்ளது. காரணம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top