செல்லாத நோட்டுகளாக குவியும் கோவில் உண்டியல்கள் - போலீஸ் விசாரணை

செல்லாத நோட்டுகளாக குவியும் கோவில் உண்டியல்கள் - போலீஸ் விசாரணை

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் சுமார் ரூ.44 லட்சம் மதிப்பில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. செல்லாத நோட்டுகளுக்கு பதில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் போடப்படும் பணத்தை பக்தர் முன்னிலையில் தினசரி இரவு 8 மணிக்கு எண்ணப்படும். அதுபோன்று நேற்று இரவு உண்டியல் பணத்தை எண்ணிய போது 1000 ரூபாய் கட்டுகள் 30ம், 500 ரூபாய் பணக்கட்டுகள் 28ம் என ரூ.44 லட்சம் இருந்தது பக்தர்கள் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் அனைவர்க்கும் அதிர்ச்சியளித்து. 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை உண்டியலில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top