உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளில் 3-ம் இடத்தில் இந்தி!

உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளில் 3-ம் இடத்தில் இந்தி!

உலகில், அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாம் இடத்தில் இந்தி மொழி இடம்பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் உள்ளன.

இந்தியா, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக்கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தி மொழிப் பயன்பாடு பல இடங்களிலும் அதிகரித்துவருகிறது. இந்தி மொழியை தேசிய மொழியாக்கும் முயற்சியில், மறைமுகமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் Money Control என்னும் தளத்தில் டாப் 10 மொழிப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கில மொழியை 1500 மில்லியன் மக்களும், சீன மொழியை 1100 மில்லியன் மக்களும் பேசுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியை 650 மில்லியன் மக்கள் பேசுகிறார்களாம். அதன்படி, இந்தியாவில் சரிபாதி மக்கள் இந்தி மொழியைப் பேசுகிறார்கள். ஃப்ரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளைக் காட்டிலும் இந்தி அதிகம் பேசப்படுகிறது. அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகளில் இடம்பிடித்துள்ள மற்றோர் இந்திய மொழி, பெங்காலி ஆகும்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top