நவ.7-ல் அரசியல் கட்சியை தொடங்குகிறார் கமல்!

நவ.7-ல் அரசியல் கட்சியை தொடங்குகிறார் கமல்!

சென்னையில் இன்று கமல்ஹாசனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் நவம்பர் 7-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என கமல்ஹாசன் கூறியதாக ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். இந்த தகவலை இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் டெங்குவுக்கு எதிராக களப்பணியாற்றவும் கல்வி சார்ந்த நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் கமல் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் அரசியல் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல்வாதிகள் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வரும் அவர் விரைவில் அரசியலுக்கு வந்ததே தீருவேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு என்பது அரசியல் பிரவேசம் குறித்தே இருக்கும் என தெரிகிறது. கமலின் பிறந்த நாள் நவம்பர் 7 ஆம் தேதி என்பதால் அடுத்த மாதம் தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top