சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 3-ம் தேதி, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை முயற்சியாக வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உலகம் நமக்கு செவி சாய்க்கும் என்பதே வானமே எல்லை நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய உரிமை, நலன்களைப் பெற்று கண்ணியத்துடன் வாழ யாவரும் அணிதிரள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 

உலக அளவில் காதுகேளாதோர் எண்ணிக்கை 6.3 கோடி பேர் என்ற அளவில் உள்ளது. தேசிய அளவில் காதுகேளாமை 2-வது பெரிய குறைபாடாக கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1215 பேர் கூடி நின்று பிரம்மாண்ட அளவில் காதுமடல் உருவினை ஒத்த வடிவத்தை உருவாக்கினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியின்
போது ஏ.ஆர்.ரெஹானா அவர்களின் இசையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் உருவான பிரத்யேகமாக பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பவதாரிணி மற்றும் அரவிந்த் பாடியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தின் ஒரு அங்கம், அவர்களால் வியத்தகு பல சாதனைகளை படைக்க முடியும் என்ற கருத்துக்கள் பொதிந்த இந்த பாடலின் ஒளி வடிவம் விரைவில் வெளியாகும் என்று ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறினார்.
 

இந்த நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதாக விவேக் ராஜா அதிகார்வபூர்வமாக அறிவித்தார். இந்த குழு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவும் தேவையான ஆவணங்களை பதிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஏ.டி.ஜி.பி பிரதீப் பிலிப், பத்ம ஸ்ரீ விருது வென்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி காயத்ரி சங்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, சத்தியபாமா பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குனர்கள், டாக்டர். மரி ஜான்சன், டாக்டர்.மரியசீனா ஜான்சன், சேது பாஸ்கர நிறுவனத் தலைவர் சேது குமணன், சி.எஸ்.சி நிறுவன இயக்குனர் ஹேமாமாலினி வெங்கட்ராமன், வழக்கறிஞர் கிரிஜா வேல்முருகன், ஆனந்தம் முதியோர் இல்ல நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கெவின் கேர், சி.எஸ்.சி இந்தியா, ஆசிப் பிரியாணி, சேது பாஸ்கர பள்ளி, யுவா மீடியா மற்றும் டி ஒன் உள்ளிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ரெயின்ட்ராப்சின் இந்த சாதனை முயற்சியில் துணை நின்றனர்.

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top