மட்டுவா சமூகத்தலைவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

மட்டுவா சமூகத்தலைவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

மேற்கு வங்கத்தில், மட்டுவா என்ற சமூகத்தினர் உள்ளனர்; இவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், ஹரிசந்த் தாகூர் என்பவர், இந்த சமூகத்தினரின் தலைவராக இருந்தார். அப்போது, இந்த சமூகத்தினரில் பெரும்பாலானோர், வங்கதேசத்தில் தான் வசித்து வந்தனர். இந்த மட்டுவா இனத்தை முன்னேற்றுவதுதான் தாகூரின் நோக்கம். வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின், இந்த சமூகத்தினர், மேற்கு வங்கத்துக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்னும் சிலர் வங்கதேசத்திலேயே உள்ளனர்.இந்த தாகூர் பிறந்த இடம், வங்கதேசத்தில் உள்ளது. தன் பயணத்தின்போது, இந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் மோடி. மேற்கு வங்க தேர்தலை மனதில் வைத்து தான் இங்கு சென்றுள்ளார் மோடி. மட்டுவா சமூகத்தைச் சேர்ந்த மூன்று கோடி பேர், மேற்கு வங்கத்தில் உள்ளனர். 70 தொகுதிகளில் இவர்களது ஓட்டுகள், வெற்றியைத் தீர்மானிக்கும்.குடியுரிமை சட்டம் இயற்றியது, இந்த அமைப்பினரிதையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்தவர்கள். இந்த சட்டத்தின் மூலம் இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும். மம்தா பானர்ஜி கட்சிக்கு ஓட்டளித்து வந்த இவர்கள், கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., பக்கம் சாய்ந்துவிட்டனர். இப்போது பிரதமர், மட்டுவா சமூகத் தலைவரின் நினைவிடத்துக்குச் சென்றது, அந்த சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top