காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபில்!

காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபில்!

காந்தி - நேரு குடும்பத்தினர் அவர்களாகவே கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்பது கபில்சிபில் உள்ளிட்ட சில தலைவர்களின் வாதமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துவந்தனர்.
 
இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும், இந்த முடிவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
 
இதையடுத்து, ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். தொடர்ந்து, டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் வைத்து அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. காந்தி - நேரு குடும்பத்தினர் அவர்களாகவே கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்பது கபில்சிபில் உள்ளிட்ட சில தலைவர்களின் வாதமாக இருந்தது.
 
தொடர்ந்து, அவர்களால் உருவாக்கப்பட்ட காரியக் கமிட்டிக் குழு, ஒருபோதும் உங்களைத் தலைமைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு செயல்பட முடியாது என்று கபில் சிபில் சோனியா, ராகுலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இல்லாவிட்டாலும் அவர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அனைவருக்கான காங்கிரஸாக இருக்கவேண்டும் என்று என் கடைசி மூச்சுவரை போராடுவேன் என்று சமீப காலமாக அடுக்கடுக்காக தலைமைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 
ஏற்கனவே, அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில், மே 16-ம் தேதியன்றே தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டதாக கூறியுள்ளார்.
 
தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இன்று கபில் சிபில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக மாநிலங்களவை தேர்தலுக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top