இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும்?

இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும்?

இந்தியாவில் 5-ஜி இணைய சேவைக்கான கட்டணம் 4-ஜி சேவைக்கான கட்டணத்தை விட 10-ல் இருந்து 12% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், அதானி எண்டர்பிரைசஸ் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கலந்துகொண்டுள்ள நிலையில், மற்ற 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5-ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
 
இதனால் 5-ஜி சேவையின் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு பயனாளர்களிடையே எழுந்துள்ளது.  கடந்த மார்ச் மாதம், ஏர்டெல் சிடிஓ ரந்தீப் செகோன் அளித்த பேட்டியில், 4-ஜி மற்றும் 5-ஜி சேவைக்கு இடையே கட்டணத்தில் அதிக வித்தியாசம் இருக்காது என்று கூறினார். அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகே தங்களால் கட்டணம் குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியும் எனவும் ரந்தீப் செகோன் கூறினார்.
 
4-ஜியின் வேகத்தை விட 5-ஜியின் வேகம் 10 மடங்கு வரை வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில், ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 14-ம் தேதிக்குள் ஏலம் நிறைவடையும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 
 
டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் 5-ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top