இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன!

இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன!

குடியரசுத் தலைவர் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் ஆதரவு கூடுகிறது. கூட்டணியில் இல்லாத கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று திரௌபதி முர்முவை சிரோமணி அகாலி தளம் ஆதரிக்கும் என்று அறிவித்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு திரௌபதியின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தப்பட்டுள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் "தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்" என அறிவித்துள்ளார்.
 
இதுக்குறித்து பேசிய சுக்பீர் சிங் பாதல், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சியிடம் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் வேறுபாடுகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் என்டிஏ வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் விஷயத்தில் பாஜகவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் எங்கள் கட்சி திரௌபதி முர்முவை ஆதரிக்கும் என்று அவர் கூறினார். நாங்கள் காங்கிரஸுடன் ஒருபோதும் செல்ல மாட்டோம் என்றார். சீக்கிய சமூகத்திற்கு காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது என்றார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்குமாறு திரௌபதி முர்மு மற்றும் ஜேபி நட்டாவிடம் இருந்து இன்று தனக்கு அழைப்பு வந்ததாக சுக்பீர் பாதல் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி பதவிக்கு முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, திரௌபதி முர்மு தனிப்பட்ட முறையில் பல்வேறு அரசியல் கட்சிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். 
 
ஒடிசாவைச் சேர்ந்த பிஜேடியும், ஆந்திராவில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் ஏற்கனவே முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஒடிசா முதல்வரும், பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக், தனது அனைத்து எம்எல்ஏக்களையும் கட்சி வேறுபாடு இல்லாமல் முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 
இதுவரை முர்முவை ஆதரித்தவர்களில் ஜனதா தளம் (எஸ்), ஜத்னா தளம் (யு), எல்ஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி ஆகிய கட்சிகளும் அவருக்கு ஆதரவாக வந்துள்ளன. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் (SKM) முர்முவுக்கு ஆதரவாக உள்ளது. சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கும் இதனை அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஜார்க்கண்ட் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடந்த காலங்களில் சந்தித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top