"திருப்பதி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி" ஏப்ரல் 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்-லைனில் வெளியிடும் ரூ.300 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக உள்ளது. நாளொன்றுக்கு 25000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. 
 
இலவச தரிசனம்:
 
அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.
 
ஆனால் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்க்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.

ஏழுமலையான் தரிசனம்:
 
டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும். அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். 
 
ஒரே மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவனம் உதவியாளர் வாங்கி கொடுப்பார். லட்டு தேவைப்படும் பக்தர்கள் தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 
 
சொந்த செலவில் மதிய உணவிற்கு பின் பக்தர்கள் திருப்பதி மலையிலிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அழைதது செல்லப்படுவார்கள். பத்மாவதி தாயாரை தரிசித்த பின் பக்தர்களை மீண்டும் ஐஆர்சிடிசி திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து வழியனுப்பி வைக்கும். ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல் சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
 
இந்த கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்கர தீப அலங்கார உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலம் கலந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top