தடை நீக்கும் திருவலஞ்சுழி விநாயகர் ஆலயம்

தடை நீக்கும் திருவலஞ்சுழி விநாயகர் ஆலயம்

தமிழகத்தின் கும்பகோணத்தைச் சுற்றிலும் உள்ள சக்தி மிக்க ஆலயங்களைச் சுற்றி வருவோம். மதுரையில் துவங்கி திருச்சி வழியாக சமயபுரம் வரலாம். அங்கிருந்து கல்லணையைக் கடந்து, காவேரி ஆற்றின் கரை வழியாகவே பயணித்து சுவாமி மலையை அடையலாம். தஞ்சாவூர் வழியாகவும் வரலாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழ மன்னனால் கட்டப்பட்டது கல்லணை. உலகின் மிகப்பழமையான ஆனாலும் பயன்பாட்டில் உள்ள அணைக்கட்டு கல்லணை. கட்டுமானப் பொறியியல் கலையில் வல்லுநர்கள் தமிழர்கள் என்ற பெருமைக்கு எடுத்துக்காட்டு இந்த அணைக்கட்டு. பயணத்தின்போது கல்லணையில் இறங்கி சற்றே இளைப்பாறலாம்; கரிகால் சோழனுக்கு மரியாதை செய்யலாம்.

திருவலஞ்சுழி என்னும் சிற்றூர் சுவாமிமலையிலிருந்து தஞ்சை - கும்பகோணம் பிரதான சாலைக்குச் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் ஆல யம். சாலைக்கு அருகிலேயே ஐந்தடுக்குகள் கொண்ட அழ கிய கோவில் கோபுரம் உள் ளது. தல விருட்சம் வில்வம் ஆகும். காவேரியும் அரசலா றும் தல தீர்த்தமாகும்.

கல்லிலே கலை வண்ணம் இறங்கி நடந்து சென்றால் சோழர் காலச் சிற்பக் கலைக் குச் சான்றாக விளங்கும் கோவில் முகப்பு மண்டபம்; அழகிய சிற்ப வேலைப்பாடு கள் நிரம்பிய தூண்கள்; அண் ணாந்து பார்த்தால் கூரை முழுவதும் சிற்பங்கள்; சுற்றி வரும்போது சுவர் எங்கும் சிற்பங்கள். வெண்கலத்தி லான சர விளக்குகளைக் கோவில்களில் கண்டிருப்பீர் கள். கல்லிலேயே வடிக்கப்ப ட்ட விளக்குத் தூண்கள் இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சம். நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட, ஒற்றைக் கல்லால் ஆன பலகணி (சாளரம், ஜன் னல்) இங்கு காணக் கிடைக் கும். இது மிக அபூர்வமா னது. சிற்பக்கலை வல்லுநர்க ளையே வியப்பில் ஆழ்த்தும் அற்புதப் படைப்பு இது.

தல வரலாறு: 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை யானது இந்த ஆலயம் என்று சொல்கிறார்கள். முதற் சங்க காலத்தில் ஆண்டு வந்த கனக ராஜ சோழனால் கட்டப் பட்டிருக்கலாம் என்கிறார் கள். பராந்தகச் சோழன் கா லக் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு சிறப்புக் கட்டளைகள் செய் வித்துள்ளார். புராணங்களில் வலஞ்சுழி பாதாள லோகத் தில் இருந்து ஆதிசேஷன் வெளி வந்ததால் பூமியில் ஒரு பெரிய துளை ஏற்பட் டது. அந்த வழியாக ஓடி வந்த காவேரி நதி அந்தத் துளை வழியாக பாதாளத்துக் குள் சென்று விட்டது. இந்த இடத்தில் வாழ்ந்த ஹிரந்தர் என்ற முனிவர் இதை அறிந் தார். தன் தவ வலிமையால் பாதாள லோகம் சென்று, காவேரியை மீண்டும் பூலோகத்தில் பாய வைத்தார். நேராக ஓடி வந்த காவேரி ஆறு, இந்த இடத்தில் புராத னமான கற்பக நாதேசுவரர் ஆலயம் இருந்ததைக் கண்டு வலது புர மாக சுழித்து ஓடிய தால் இந்த இடம் வலஞ்சுழி என்று அழைக்கப்பட்டது. தடை நீக் கும் வலஞ்சுழி பிள்ளையார் அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்த தேவர் கள் அதில் வெற்றி அடைய முடியாமல் தவித்தார்கள். விநாயகரை வழிபடாமல் பணியைத் துவங்கியதால் தடை ஏற்பட்டதை உணர்ந்தா ர்கள். உடனே, தேவேந்திரன் பாற் கடலின் நுரையினால் ஒரு பிள்ளையார் உருவம் செய்து வழிபட, தேவர்களின் முயற்சிக்குப் பலன் கிட்டி யது. வெள்ளைப் பிள்ளை
யாரை தேவர்கள் வைத்து வழி பட்ட இடத்தில் (இன்றைய திருவலஞ்சுழி) இருந்து அகற்ற முடியவில்லை. அன்று அங்கு அமர்ந்த பிள் ளையார் இன்றும் பக்தர்க ளுக்கு அருள் பாலித்து வரு கிறார். தூய வெள்ளை நிறத் தில் காட்சி அளிக்கிறார் இந்த சுவேத விநாயகர் என்னும் நுரைப் பிள்ளையார். பாற் கடலின் நுரையினால் செய்த பிள்ளையார் என்பதால் அபி க்ஷேகங்கள் செய்வதில்லை. பலவித இடையூறுகளால் அல்லல்படும் பக்தர்கள் பலர் வந்து வழிபட்டு பயன் அடையும் ஆலயம் இது.    சுயம்பு லிங்கமாக காட்சி தரும் சிவபெருமான் சடை முடி நாதராக பெரிய நாயகி அம்மனுடன் பக்தர்களுக்கு அருள் தரும் திருத்தலம் இது. திருஞான சம்பந்தர் மற்றும் அப்பர் சுவாமிகளால் தேவா ரப் பாடல் பெற்ற தலம் இது. திருவிழா கொண்டாட்டம் விநாயகர் சதுர்த்தி இங்கு பத்து நாள் விழாவாக விமரி சையாகக் கொண்டாடப்படு கிறது. மகாசிவராத்திரி, திருக் கார்த்திகை தினங்களில் திரு வலஞ்சுழி திருவிழாக்கோ லம் பூணும். வருடம் ஒரு நாள் சுவாமி மலையிலிருந்து முருகப் பெருமான் அண்ண னின் ஆலயத்துக்கு வருகை தருகிறார். அந்த நாளில் ஸ்க ந்த புராணத்தின் வள்ளி திரு மணக் காட்சி அரங்கேற்றப்ப டும். வள்ளியை அடைய தம் பிக்குத் தடை நீக்கியவர் விநாயகர் அன்றோ!

தினசரி பூஜை: தினமும் காலை 6.00 மணியிலிருந்து 12 மணி வரையிலும், மாலை 04.00 மணியிலிருந்து இரவு 08.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.  அன்னை அக்ஷ்ட புஜகாளி தனி சந்நிதியில் இருந்து அச்சம் அகற்றுகிறாள். சனி பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. மகாவிக்ஷ்ணுவும் மகாலட்சுமியும் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார் கள். அச்சம் அகன்று, தடை நீங்கி, ஆனந்தம் பெற்று, மனம் அமைதி அடையச் செய்யும் அற்புதத் தலம் திருவலஞ்சுழி.

அழைத்துச் செல்பவர்:  K.Chandramohan, M.A., M.Phil., Blue Pencil, Madurai (Eng. Language Trainers) E-mail: mohan.bluepencil@gmail.com

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top