வளர்ச்சிக்கான ஹோமப் பரிகாரங்கள்!

வளர்ச்சிக்கான ஹோமப் பரிகாரங்கள்!

எம்மில் பலரும் தங்களின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அதற்குரிய அங்கீகாரமோ அல்லது வாழ்க்கையில் முன்னேற்றமோ கிடைக்காமல் தவித்துவருவர். இதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அல்லது யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் அல்லது யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் அவர்கள், தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தி விடுவார்களோ என அஞ்சி, தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு நொந்து கொள்வர்.

இவர்கள் தங்களின் மேம்பாட்டிற்கான பாதையை யாராவது எடுத்துரைத்தால்.. அவர்களை தங்களின் உற்ற துணைவனாகவும், உரிய ஆசானாகவும் போற்றுவர். ஒவ்வொருவருடைய கைரேகையும் தனித்தன்மை வாய்ந்தது. அதேபோல் அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறனும் தனித்துவமானது. அதனை பயன்படுத்தி முன்னேறுவதற்கு இருக்கும் தடைகளை - அவர்களுக்கு தெரியாமல் பின்னப்பட்டிருக்கும் மாய வலைகளை தங்களுடைய சூட்சுமமான சோதிட மற்றும் மெய்ஞான அறிவால் கண்டறிந்து, அதனை, அதற்குரிய வழிமுறைகளில் நீக்கி, முன்னேற்றத்திற்கான பாதையை முன்னெடுப்பவர்கள் தான் உலகப்புகழ்ப் பெற்ற குருவாயூர் சோதிட பரம்பரையினர். இந்த பாரம்பரியத்தில் வந்த வரும் மூன்று தலைமுறைகளாக பிரசித்திப்பெற்ற குருவாயூர் சோதிட சாஸ்திரத்தில் வல்லவருமான டாக்டர்.கே.கே.நாயர் அண்மையில் சந்தித்தோம்.

கல்லூரி, காட்டுமாடம், சூரியகாலடி ஆகிய கேரளாவில் உள்ள இடங்களில் கற்பிக்கப்படும் பாரம்பரியமான சோதிட சாஸ்திரம்தான் குருவாயூர் சோதிட சாஸ்திரம். இங்கு ஒருவர் பன்னிரண்டு ஆண்டுகள் சோதிடக் கலையை பயின்றால்தான் இக்கலையில் தேர்ச்சிப் பெற்றவர் என்ற தகுதியை பெறுகிறார். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இங்குள்ள சாஸ்திர நடைமுறைகளையும் நியம கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பது என்பது எளிதான காரியமல்ல.

மக்கள் ஏன் இந்த சோதிட முறையை தெரிவுசெய்ய வேண்டும் என்று எம்மிடமே கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். மனதில் இனமறியா பயம் ஏற்படுவதால் உருவாகும் தோஷம், தீயவர்களை கொலை செய்யவேண்டும், ஆயுதங்களால் தாக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்வதால் உருவாகும் மாய தோஷம், குரு சாபம், தேவ சாபம், பிதுர் சாபம் போன்ற சாபங்களால் உண்டாகும் வியாதி போன்ற இவற்றையெல்லாம் மருத்துவம் படித்த வைத்தியர்களால் குணப்படுத்த இயலாது.

வைத்தியர்கள் வாத, கப, பித்த என்ற மூன்றின் காரணமாக உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமே தீர்வளிப்பவர்கள். இன்னும் தெளிவாக விளக்கவேண்டும் என்றால் 80 வகையினதான வாதநோய், 40 வகையினதான பித்தநோய், 20 வகையினதான கபநோய்கள் என இவற்றைத்தான் மருத்துவர்களால் குணப்படுத்த இயலும். ஏனைய சிக்கல்களுக்கு ஹோமம் மற்றும் பூஜைகளின் மூலமே தீர்வு காண இயலும். உடனே உங்களின் மனதில் ஹோமங்கள் செய்தால் அனைத்தும் சரியாகிவிடுமா? என்ற வினா எழக்கூடும். ஒவ்வொரு வியாதிகளுக்கு அதன் தீவிரம் மற்றும் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு மாத்திரைகள் இருப்பது போல், தோஷங்களுக்கும் ஒவ்வொரு வகையினதான ஹோமங்கள் இருக்கின்றன.

இந்த ஹோமங்கள் மூலமே உங்களின் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான பாதையை கண்டறிந்து, அதனை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறோம். உதாரணமாக அகோரம், சுதர்ஸனம், பிரத்தியங்கிரி, கல்கி ராவனம், வீரபத்திரம், ஸரபா, யமராஜ்ஜியம், ஸந்தான கோபாலம், ஸ்வயம்வர பார்வதி, மஹா சுதர்சனம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான ஹோமங்கள் இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான ஹோமம் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே ஹோமங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண ஹோமங்களால் தோஷங்களிலிருந்து விடுபட இயலாது.

தற்போதைய சூழலில் மந்திர உச்சாடனம் செய்யும் பிராமணர்கள் ஹோமங்கள் வளர்க்கும்போது, அவர்கள் மஹா சுதர்சன ஹோமத்திற்கான மந்திரங்களை உச்சரிப்பார்கள். ஆனால் அதற்குமுன் உச்சரிக்கப்படவேண்டிய தியானத்திற்கான மந்திரங்களை சொல்வதில்லை. ஏனெனில் அப்படி சொல்லி மந்திரங்களை உச்சரிக்கும் முறைகால அவகாசம் கருதி சுருக்கப்பட்டுவிட்டது.

ஆனால் குருவாயூர் சோதிட பாரம்பரியத்தில் வரும் எம்மைப் போன்றவர்கள் இதனை இன்றளவிலும் கடைபிடித்து வருகிறோம். ரிஷி தியானம் சொல்லாமல் சொல்லப்படும் மந்திரங்களுக்கு சக்தியில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் ஒவ்வொரு ஹோமங்களுக்கும் ஒவ்வொரு வகையினதான ரிஷி தியானம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹோமத்திற்கான இடம் உங்களுடைய விருப்பம் மற்றும் பொருளாதார சக்தியைப் பொறுத்தது. உங்களுடைய இடத்திலும் செய்யலாம் அல்லது எம்முடைய இடத்திலும் செய்யலாம். நான் ஏற்கனவே இதற்காக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன்.

முதலில் யார் வந்தாலும் அவருடைய பெயருக்கு சோழிப்போட்டு பிரசன்னம் பார்ப்போம். பின்னர் அவருக்கு என்ன சிக்கல் எற்பட்டிருக்கிறது என்பதை சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி ஆராய்வோம். கடவுளை மனதில் தியானித்து, மெய்ஞான அறிவால் அவர்களுக்குரிய ஹோமங்களைக் குறித்து ஆராய்ந்து சொல்வோம். உங்களுடைய பிரச்சினைகள்தான் ஹோமங்களைத் தீர்மானிக்கின்றனவே தவிர எம்முடைய பொருளாதார மேம்பாட்டிற்காக எதையும் திணிப்பதில்லை.

வேறு சோதிட முறைகளில் மாய தடைகளான தோஷங்கள், பில்லி, செய் வினை, சூன்யம், வியாதிகள் போன்றவைகளை அவதானிக்க இயலாது. ஆனால் பிரசன்னத்தில் இவையனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் கேரள மாநிலத்திலுள்ளவர்கள் ஜாதகத்தைக் காட்டிலும் பிரசன்னத்தை பிரதானமாக பார்க்கிறார்கள். இறந்து போனவர்களுக்கு மோட்சம் கிடைக்காவிடில், அவர்கள் அவர்களது உறவினர்களையே அரூப உருவில் தஞ்சமடைந்து தொல்லையளித்து வருவார்கள். இவர்களுக்கான மோட்ச பிராப்தி கிடைக்கச்செய்வதும் இவ்வகையினதான சோதிடத்தில்தான்.

மரணித்தவர்களுக்கு பிராமணர்கள் செய்வது திலக் ஹோமங்கள். அதற்குமுன் செய்ய வேண்டியவற்றை செய்வது இந்த சோதிடத்தைப் பின்பற்றும் பரம்பரையினர் தான். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ஒரு தொழிலதிபர் குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது என்று துர்மரணம் சம்பவித்த இடத்தை தெரிவுசெய்து அங்கு வணிக வளாகம் கட்ட எண்ணினால், அதனை நல்லவிதமாக கட்டி முடிக்க இயலாது. இந்நிலையில் நாங்கள் அங்கு சென்று அங்கு நடைபெற்ற அல்லது அங்கு இருக்கும் துர்மரணத்தின் பிந்தைய அரூப விடயங்களை கண்டறிந்து, அதனை திருப்திபடுத்தி, சாந்தி செய்து, அவர்களுக்கான மரியாதையை அளித்து, அவர்களுடைய சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்போம்.

மாந்தி ஒரு பிரேதகாரகன். மாந்தி இல்லாமல் பிரசன்னம் பார்க்க இயலாது. ஏனைய கிரகங்களைப்போல் ஜாதக கட்டத்தில் மாந்திக்கு என்று தனியாக வீடு கிடையாது. ஆனாலும் லக்னத்திற்கு எந்த இடத்தில் என்ன பலனைத்தரும் என்று கூறும் சோதிட விதிகள் உள்ளன. மாந்தி பொதுவாக துர்பலன்களையே அதிகம் தருபவர். ஆனால் மாந்தி இருக்கும் இடத்தை குரு பார்வையிருந்தால் அங்கு மாந்தி தோஷம் கிடையாது. இதனால்தான் ஒவ்வொரு குருபெயர்ச்சிக்கும் குருவின் பார்வை எங்கு இருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையை துல்லியமாக கண்டறிந்து நாங்கள் பரிந்துரைக்கும் ஹோமங்களை செய்தால் மாந்தியின் துர்பலனில் இருந்து விடுபட முடியும்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top