கல்வியின் அவசியத்தை ஆத்மாவை கொண்டு வெளிப்படுத்துகிறது சாயா திரைப்படம்

கல்வியின் அவசியத்தை ஆத்மாவை கொண்டு வெளிப்படுத்துகிறது சாயா திரைப்படம்

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது ’சாயா’.
 
சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ”சாயா” படம் ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர் V.S. பழனிவேல்.  இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார். 
 
படம் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து அறுபது நாட்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.
 
Y.G.மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன் தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களாக ஆர். சுந்தர்ராஜனும், பயில்வானும் கலக்கி உள்ளார்கள். இதற்கிடையே வாய் தவறி சொன்ன ஒரு வார்த்தையால் ஆத்மாவாக மாறி படம் முழுக்க சேட்டைகள் செய்திருக்கிறார்கள் நெல்லை சிவாவும், மனோகரும். வில்லன்களான பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர்  இப்படத்தில் கிராமத்து பண்ணையார்களாக மிரட்டியிருக்கிறார்கள்.
 
புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாக நடித்துள்ளார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவ பட நடிகை போல் அசத்தி உள்ளார். சோனியா அகர்வால் விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடி நாயகியாக நடித்து பிரமிக்க வைத்து உள்ளார். கொட்டாச்சி வில்லன் பங்காளியாக காமெடி செய்துள்ளார்.
 
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெயிடுகிறார்  V.S. சசிகலா பழனிவேல். நவம்பர் வெளியீடாக வெளிவரவிருக்கிறது சாயா திரைப்படம்.

Tags: News, Hero, Madurai News, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top