ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக 1000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக 1000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்!

ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஜியோ சிம், தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. எண்ணிலடங்கா அழைப்புகள் மற்றும் 4ஜி இணையசேவை இலவசம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலானோர் ஜியோ சிம்முக்கு மாறினார்கள்.

இந்நிலையில் யாரும் நம்ப முடியாத விலைக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.1000 மற்றும் ரூ.1500க்கு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளன. இந்த ஸ்மார்ட் போனில் வாய்ஸ் ஓவர் எல்.டி.ஈ. (VoLTE) எனப்படும் அதிநவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உள்ளதாம்.

இண்டர்நெட், வீடியோகால் வசதி, வாய்ஸ் கால், தரமான கேமிரா, புளூடூத், வைபை, பெரிய டிஸ்ப்ளே,  மற்றும் பல அம்சங்கள் உள்ள இந்த ஸ்மார்ட்போன் வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ சிம்-ஆல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ரிலையன்ஸ் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் செக் வைத்துள்ளது.

Tags: News, Lifestyle, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top