இலங்கை வீரர்களுக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்த டோணி!

இலங்கை வீரர்களுக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்த டோணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. ஒருநாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் வென்ற இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் டி-20 தொடரையும் அபாரமாக வென்றது. இதன் காரணமாக டி-20 தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 

இந்த போட்டியின் போது டோணி மிகவும் கூலாக இருந்தார். ஏற்கனவே தொடரை வென்று இருந்ததால் மூன்றாவது போட்டியின் போது இவர் ஜாலியாக இருந்தார். ஆனாலும் எப்போதும் போல வின்னிங் ஷாட் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். போட்டி முடிந்த பின் டோணி இந்திய வீரர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆனது. 

போட்டிக்கு பின் டோணி இலங்கை வீரர்களுக்கு பேட்டிங் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பேட்டிங்கில் இருக்கும் சில முக்கியமான வித்தைகளை அவர் கற்றுக்கொடுத்தார். இந்த செயல் அப்படியே வீடியோவாக பதிவாகி இருக்கிறது. தற்போது இது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. 

இலங்கை வீரர் பெரேரா மைக்கில் பேசும் போது இந்த சம்பவமும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அதில் டோணி எந்த இடத்தில் கால் வைத்து எப்போது பேட்டை தூக்க வேண்டும் என்பது போன்ற செய்து காண்பிக்கிறார். இலங்கை வீரர்கள் இதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தனர். இதை இந்திய ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.  இதை வைத்து பலரும் டோணியை பாராட்டி வருகின்றனர். எதிரணி வீரர்களுடன் இயல்பாக பழகும் டோணியின் செயல் பலரையும் வியக்க வைத்து இருக்கிறது. அதே சமயம் இலங்கை வீரர்களையும் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Tags: News, Sports

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top