புதிய Mi பவர் பேங்க் பூஸ்ட் ப்ரோ அறிமுகம்!

புதிய Mi பவர் பேங்க் பூஸ்ட் ப்ரோ அறிமுகம்!

சியோமி நிறுவனம் இந்தியாவில் 30,000 எம்ஏஎச் சக்தி கொண்ட புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் ப்ரோ (Mi Power Bank Boost Pro) சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சியோமி நிறுவனம், இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் சியோமி நிறுவனம் இந்த புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது நிறுவனம் 15 நாட்களில் 5,000 யூனிட் என்ற குறிக்கோளுடன் கிரவூட் ஃபண்டிங் மூலம் ஆர்டருக்கு கிடைக்கிறது. சியோமி மே 15 முதல் இந்த புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ தயாரிப்புகளை அனுப்பத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. இது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டும் கிடைக்கும்.
 
பெயர் குறிப்பிடுவதுபோல், இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பவர் பேங்க் 30,000 எம்ஏஎச் திறன் கொண்டது. மேலும், புதிய பவர் பேங்க் அதன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. அதன் 30W பாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ வெறும் 7.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. 30,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் சாதனம் நிச்சயம் பயனுள்ள ஒரு சாதனம் தான்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top