எலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள்

எலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள்

வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகிய வளமையான திரவ எரிப்பொருட்களின் மூலமாக இயங்குவதை முயன்ற அளவில் குறைத்துக் கொள்வதற்காக எலக்ட்ரிக் சார்ஜில் இயங்கக்கூடிய வாகனங்கள் இனி வரும் காலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு பெருநகர சாலைகளில் 83 சார்ஜ் மையங்களும் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 24 சார்ஜ் மையங்களும் மொத்தம் 107 சார்ஜ் மையங்கள் நிறுவிட அனுமதி கோரப்பட்டுள்ளது. மின் சக்தியில் இயங்கிடும் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு ஒவ்வொரு 25 கிலோ மீற்றர் இடைவெளியிலும் சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

ஒரு எலக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்திட ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். முழுமையாக சார்ஜ் செய்த காரில் 120 கிலோ மீற்றர் வரை பயணிக்கலாம். இவ்வகை கார்களை டிசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய முப்பது நிமிடங்கள் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை ஆகலாம். அதே போல் ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 5 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகலாம். தற்பொழுதே இத்தகைய எலக்ட்ரிக் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் பெங்களூரு பெருநகரத்தில் இயங்கி வருகின்றன.

Tags: Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top