மழைக்காலத்தில் உங்கள் காரின் பாதுகாப்பிற்கு நாங்க கேரண்டி!

மழைக்காலத்தில் உங்கள் காரின் பாதுகாப்பிற்கு நாங்க கேரண்டி!

வீட்டிற்கு எப்படி டூவீலர் வைத்திருப்பது அத்தியாவசியமாகிவிட்டதோ, அப்படி இன்று காரும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது என்றே சொல்லலாம். இயற்கை சூழல், குடும்பத்தின் சமுதாய நிலை, சவுகரியமான வாழ்க்கை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

எப்படியிருந்தாலும் ஒரு சிறப்பான காரின் விலையானது நிச்சயம் ஐந்து இலட்சத்தை தாண்டியதாகவே இருக்கும். இத்தனை இலட்சம் போட்டு வாங்கினால் மட்டும் போதுமா? அதை சரியாக கவனித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா.. ‘வருமுன் காக்கவேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதுதான் காருக்கும். என்னதான் விழுந்து விழுந்து காரை நாம் கவனித்துக் கொண்டிருந்தாலும், காரில் ஸ்க்ராட்ச் விழுவதையும், காரின் பெயிண்டிங் மங்கிப்போவதையும் நம்மால் தடுக்க முடியாமல் ரி-பெயிண்டிங் மட்டுமே செய்யவேண்டுமென்கிற நிலை இருந்துவந்தது. ஆனால் அந்த நிலை இனி இல்லை என சவால் விடுகிறார்கள் ஆட்டோ ஸ்பார்க்ஸின் உரிமையாளர் திரு. முகமது நயீம் அவர்கள்.

‘தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. இதனால் அன்றாடம் நம்முடைய கார் சேற்றிலும் சகதியிலும் செலுத்த வேண்டிய ஒரு கட்டாயமான சூழல் இருக்கத்தான் செய்யும். அப்படி நாம் செலுத்தும்போது நம்முடைய காரின் கீழ் உள்ள சேஸ் பகுதியில் சேறு சென்று காலப்போக்கில் அவை துருவை ஏற்படுத்தும். அத்தோடு வண்டியின் வெளிப்புறத்தில் ஒட்டும் சகதியும் கவனிக்கப்படாதபோது அவை பெயிண்ட்டை மங்கவைக்கும். இத்தகைய சூழலில் மீண்டும் கார் புதுப்பொழிவு அடைய வேண்டுமானால் நிச்சயம் ரீ-பெயிண்டிங் செய்ய வேண்டும். ஆனால் ரீ-பெயிண்டிங் செய்ய நிச்சயம் நாற்பது ஆயிரம் வரையிலாவது செலவாகும்.

இவை எல்லாவற்றிலிருந்தும் வண்டியை தற்காத்துக்கொள்ள முதலில் அண்டர் சேஸ் பெயிண்டிங் செய்து கொள்வது அறிவுறுத்தலானது. வண்டியின் கீழ்பகுதியில் பிரத்யேகமான ஒரு பெயிண்டைக் கொண்டு பூசுவதால் சேஸில் நேரடியாக சகதி ஏற்படாது. அதேப்போல் வண்டியின் வெளிப்புறத்தில் வேக்ஸ் கோட்டிங் கொடுத்தால் அது தூசி மற்றும் சகதியால் காரின் வெளிப்புறத்தை சேதப்படுத்தாது. இந்நிலையில் வெளிப்புறம் அழகிற்காக தூய்மையாகப்பட்டாலும் காரின் உட்புறம் நம் ஆரோக்கியத்தை கெடுக்காமல் இருக்கவேண்டும். எங்களின் ஆட்டோ ஸ்பார்க்ஸில் பிரத்யேகமாக இண்டீரியர் கிளினிங் செய்து கொடுக்கிறோம். அத்தோடு ஏசி கிளீனிங்கும் செய்துக்கொடுக்கிறோம். நாம் அன்றாடம் ஏசி பயன்படுத்துவதால் அந்த ஏசிக்குள் நிச்சயம் பல பேக்டீரியா இருக்கும். அவற்றையும் ஏசியில் உள்ள தூசியையும் கிளீன் செய்வது அவசியம், அதனையும் நாங்கள் இங்கு சிறப்பான முறையில் செய்துகொடுக்கிறோம்.

அத்தோடு எங்களின் ஒரு தனிச்சிறப்பாக செராமிக் கோட்டிங் செய்து கொடுக்கிறோம். இதில் வாடிக்கையாளர்களுக்கு பல சேமிப்பு இருக்கிறது. இந்த செராமிக் கோட்டிங்கானது 10 மைக்ரான் அடர்த்தியைக் கொண்டுள்ளதால், இந்த கோட்டிங்கைப் போட்டப் பின், ஸ்க்ராட்ச் ஏற்பட்டாலும் அதை சாதாரண மைக்ரோ-பைபர் துணியை வைத்தே துடைத்துவிடலாம். மேலும், இந்த கோட்டிங் போட்டப் பின் காரில் தூசி ஒட்டாது, காரின் பளபளப்பான தன்மையும் போகவே போகாது. அத்தோடு இந்த கோட்டிங் போட்டப்பின் அதிகப்படியான மழையில் சென்றாலும், மழை நீர் கண்ணாடியில் ஒட்டாது. இதனால், காரின் வைபரை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் ரீ-பெயிண்டிங் செய்ய வேண்டுமென்கிற அவசியம் இருக்காது. கார் எத்தனை ஆண்டுகளானாலும் புதிதாகவே இருக்கும். இதனால் காரின் ரீ-சேல் மதிப்பும் அதிகமாக இருக்கும். இதன் விலை கார்களை பொருத்து மாற்றம் காணும், இருப்பினும் காரை நாம் ஷோ-ரூமில் எப்படி எடுக்கிறோமோ அந்த பொழிவு என்றென்றும் இருக்கும்.

இங்கு இந்த பிரத்யேக கோட்டிங் செய்வதோடு, போஃம் வாய்ஸ், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் கிளினிங், ஹெட்-லாப் கிளினிங், டீட் டெய்லிங், பாலிஸிங் போன்றவற்றை சிறப்பான முறையில் செய்து எவ்வளவு பழைய காரையும் புதியதுபோல மெருகேற்றுகிறோம்’ என கூறினார்.

தொடர்புக்கு: 9655298000

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top