மெர்சல் டீசர், டிரைலர் ரிலீஸ் எப்போது?

மெர்சல் டீசர், டிரைலர் ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதுப்புது செய்திகள் தினமும் வெளிவந்து சமூக இணையதளங்களை பரபரப்பாக்குவதுடன் டிரெண்டிங்கிலும் உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள், இசை வெளியீட்டு விழா ஆகியவை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து கொண்டன.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது 'மெர்சல்' படத்தின் டீசருக்காகத்தான். இந்த படத்தின் டீசர் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று இயக்குனர் அட்லி இசை வெளியீட்டு தினத்தின்போது கூறியுள்ளதால் தற்போது டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த தகவலை சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதன்படி 'மெர்சல்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தயாராகி வருவதாகவும், வெகுவிரைவில் பின்னணி இசை, தீம் மியூசிக் இணைப்புகள் முடிந்தவுடன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் எந்த நேரத்திலும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top