மீண்டும் தமிழில் கஜோல்

மீண்டும் தமிழில் கஜோல்

ராஜீவ் மேனன் இயக்கிய மின்சார கனவு என்ற படத்தில் அரவிந்த் சாமி மற்றும் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கஜோல். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் 2 ஆம் பாகத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தனுஷ் நாயகனாக நடிப்பதாலும், தனுசிற்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் இருப்பதாலும், தன்னுடைய சம்பளம் ஒத்துவந்தால் இப்படத்தில் நடிக்க கஜோல் சம்மதிப்பார் என்றே தெரிய வருகிறது.

அப்படியொரு வாய்ப்பு உருவாகும் பட்சத்தில் வேலையில்லா பட்டதாரி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் என முன்று மொழிகளில் வெளியாகும் வாய்ப்பு உருவாகும். இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்தின் புகழும் உயரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top