தளபதியுடன் இணையும் யோகி பாபு!

தளபதியுடன் இணையும் யோகி பாபு!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'தளபதி 65' படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தளபதி 65'. அதிகாரபூர்வமாக இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜயுடன் காமெடி நடிகர் யோகிபாபு இணைந்திருக்கிறார். 'மெர்சல்', 'சர்க்கார்', 'பிகில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக யோகிபாபு விஜயுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
 
இதனிடையே யோகி பாபுவின் நடிப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய்.டி.வி.-யில் நேரடியாக ஒளிபரப்பான 'மண்டேலா' படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் யோகிபாபு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெறுவார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top