தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா 'தலைவி' திரைப்பட முன்னோட்டம்...?

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா \'தலைவி\' திரைப்பட முன்னோட்டம்...?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் 'தலைவி' படத்தின் முன்னோட்டம் மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'தலைவி'. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் சுயசரிதையை தழுவி இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதில் ஜெயலலிதாவாக பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், நடிகைகள் மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடப்பதாலும், ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வகையிலும், இப்படத்தின் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் நடிகை கங்கனா ரணாவத் பிறந்தநாள் மார்ச்சு 23ஆம் தேதி என்பதால் அன்றைய தினத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
 
இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா மறைவிற்குப்பின் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, மரணத்திற்கு முன் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காணொளி வெளியாகி, தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாக இருப்பதால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 'தலைவி' படத்தின் முன்னோட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top