விக்ரம் பிரபுவின் 'புலிக்குத்தி பாண்டி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்ரம் பிரபுவின் \'புலிக்குத்தி பாண்டி\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகிவரும் 'புலிகுத்தி பாண்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'குட்டி புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'புலிக்குத்தி பாண்டி'. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார்.
 
'நாங்க ரொம்ப பிஸி' என்ற படத்தை தயாரித்து நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'புலிக்குத்தி பாண்டி' என்ற திரைப்படமும், பொங்கல் திருநாள் விழாவில் சன் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
'புலிகுத்தி பாண்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விக்ரம் பிரபுவின் கிராமிய எக்சன் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையத்தில் இதற்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top