'வா பகண்டையா' ஓடியோ வெளியீடு

\'வா பகண்டையா\' ஓடியோ வெளியீடு

சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மெல்லிசை திலகம்', 'இசை ஆண்டான்' எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைப்பில் உருவாகியிருக்கும் 'வா பகண்டையா' படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குனர் ப. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'வா பகண்டையா'. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சதீஷ் கதையின் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக ஆர்த்திகா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன் யோகிராம், போண்டாமணி, 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருக்கிறார். 
 
சிறிய இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருப்பதால் இப்படத்தின் ஓடியோவிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, பெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, இயக்குனர் சங்க முன்னாள் தலைவர் இயக்குனர் விக்ரமன், இயக்குனர் பேரரசு உள்ளிட்டபல்வேறு திரையுலக பிரபலங்களும், தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயக்குமார் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர்களும் பங்குபற்றினர். இவ்விழாவில் படத்தின் முன்னோட்டமும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
 
படத்தைப் பற்றி இயக்குனர் ஜெயக்குமார் பேசுகையில், ' வா பகண்டையா' என்பது, தமிழகத்தின் விழுப்புரத்திற்கு அருகேயுள்ள எம்முடைய பிறந்த மண்ணின் பெயர் பகண்டை. அதனையே தலைப்பாக்கி படத்தை இயக்கியிருக்கிறேன். வழக்கமான காதல் கதை என்றாலும், அதில் அழுத்தமான சமூக நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன்' என்றார். 
 
படத்தை இசை குறித்து இயக்குர் விக்ரமன் பேசுகையில்,“எஸ் ஏ ராஜ்குமாரின் மெலோடிக்கு நான் ரசிகன் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மெலோடியும் எமக்கு பிடித்திருக்கிறது.’’ என்றார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top