இளைஞர்களை கவர்வதற்கு புதிய வியூகத்தை உருவாக்கியுள்ள பிரபல ஒளிப்பாதிவாளர் – எப்படி தெரியுமா?

இளைஞர்களை கவர்வதற்கு புதிய வியூகத்தை உருவாக்கியுள்ள பிரபல ஒளிப்பாதிவாளர் – எப்படி தெரியுமா?

பிரபல  ஒளிபதிவாளர்  மற்றும்  இயக்குநரான  சுரேஸ்  மேனன்  ‘தானா  சேர்ந்த  கூட்டம்’  மற்றும்  ‘ஜீங்கா’  ஆகிய  படங்களில்  வில்லனாக  நடித்துள்ளார். இவர் தற்போது  ‘காளிதாஸ்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘அடங்க மறு’  உள்ளிட்ட  சில  படங்களில்  நடித்து  வருகிறார்.

இந்நிலையில் இளம் தலைமுறையை ஈர்க்கும் வகையிலான புதிய வகை விளையாட்டு அப்ஸ் (Apps) ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த அப்ஸிற்கு  ‘மை கர்மா’ என்று பெயரிட்டுள்ளார்.
 
இளைய  தலைமுறையை  ஈர்க்க  குறித்த  அப்ஸை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள சுரேஸ் மேனன், இதன்  மூலம்  தனக்கும்  பயனாளிக்கும்  மட்டுமே  நேரடி  தொடர்பு  ஏற்படுவதாக  குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் இந்த ‘க்விஸ்’  விளையாட்டில்  நான்கு  கேள்விகள்  கேட்கப்படும் என்றும்  இந்த  விளையாட்டின்  மூலம்  தெரியாத  விடயங்களையும்  தெரிந்துக்கொள்ள  முடியும்  எனவும்  தெரிவித்துள்ளார். மேலும் இரவு  7  மணிமுதல்  9  மணி  வரை  மாத்திரமே குறித்த  விளையாட்டை  விளையாட  முடியும்  என்றும்  தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை,  பொது  சேவை  செய்யும்  அமைப்புகளுக்கும்  இந்த  அப்ஸின்  மூலம்  உதவி  செய்ய  முடியும்.  இதன்  முதற்  கட்டமாக அருணோதயா  சேவை  அமைப்புக்கு  உதவி  செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top