வெள்ளித்திரை களத்தில் மோதவிருக்கும் தீபாவளி திரைப்படங்கள்!

வெள்ளித்திரை களத்தில் மோதவிருக்கும் தீபாவளி திரைப்படங்கள்!

திரைப்பட வரிசை:

காஷ்மோரா - கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா

சைத்தான் - விஜய் ஆண்டனி

கத்தி சண்டை - விஷால், தமன்னா

கொடி - தனுஷ், த்ரிஷா, அனுபமா

கடவுள் இருக்கான் குமாரு - ஜி.வி.பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி

கதைக்களம்

காஷ்மோரா - "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" புகழ் கோகுல் இயக்கத்தில் கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் காஷ்மோரா. பில்லிசூனியம் மற்றும் தீய ஆவி இரண்டிற்குமிடையேயான கதைக்களமே காஷ்மோரா. ட்ரீம்  வாரியார் பிச்சர்ஸ் பிரபு தயாரிப்பில் மிகப்பெரிய அளவிலான பொருட்செலவில் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். Video Link

சைத்தான் - "பிச்சைக்காரன்" வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் திரைப்படம் "சைத்தான். எதிர்மறை தலைப்பை கொண்டே அனைவரையும் கவரும் விஜய் ஆண்டனியின் சைத்தான், மனரீதியான த்ரில்லர் சம்பந்தப்பட்ட திரைக்கதை. அருந்ததி நாயர் இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். Video Link

கத்தி சண்டை -  விஷால் மற்றும் தமன்னா முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஆக்ஷன் காமெடி கலந்த மசாலா  திரைப்படம் கத்தி சண்டை. மாப்பிள்ளை  மற்றும் சகலகலா வல்லவன் படங்களை இயக்கிய சுராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சூரி மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார். Video Link

கொடி - தனுஷ் தயாரித்து நடிக்கும் அரசியல் மற்றும் த்ரில்லர் கலந்த படம் கொடி. இப்படத்தை துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ளார். த்ரிஷா எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிரேமம் புகழ் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். Video Link

கடவுள் இருக்கான் குமாரு
-  SMS, OKOK திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கார் குமாரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனந்தி மற்றும் நிக்கி கல்ராணி என்ற இரு கதாநாயகிகளைக் கொண்டது இப்படம். இதில் பிரகாஷ் ராஜ் மற்றும் RJ பாலாஜி துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். Video Link

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top