அடுத்த கட்டத்தை நோக்கி தல அஜித்தின் 'விவேகம்'

அடுத்த கட்டத்தை நோக்கி தல அஜித்தின் \'விவேகம்\'

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இதன்படி இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்குகிறது. முதலில் அஜித் அதன் பின்னர் மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளதாகவும், அந்த காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் வெகுவிரைவில் நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top