இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக...

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக...

'இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக' என்பதை மிகவும் பிரபலப்படுத்தியது சன் டிவி. அதே போல 'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்' என திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் எப்பவோ இழுத்துக் கொண்டது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் தனியார் தொலைக்காட்சிகள் புதிய படங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. பல படங்களின் சாட்டிலைட் டிவி உரிமை விற்கப்படாமல் முடங்கிக் கிடந்தது. ஆனால், தற்போது அந்த வியாபாரமும் பரபரப்பாகிவிட்டது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி ஆகியவற்றிற்கு இடையில்தான் தற்போது புதிய படங்களை வாங்குவதில் அதிக போட்டி இருக்கிறது என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

'தெறி, வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கியதாக நேற்று அறிவித்த சன் டிவி, இன்று 'ஸ்பைடர்' படத்தை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பல புதிய படங்களின் உரிமைகளையும் சன் டிவி தன் வசமாக்கியுள்ளது. நமக்குக் கிடைத்த தகவலின் படி 'விவேகம், பைரவா, சி 3, போகன், தரமணி, மீசைய முறுக்கு, அறம், தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களையும் வாங்கியுள்ளது.

அத்துடன், சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியின் அடுத்த படம், சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் புதிய படம் ஆகியவற்றையும் வாங்கியுள்ளது. அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விசேஷ நாட்கள் வர உள்ளதால் சன் டிவியில் அந்த நாட்களில் புத்தம் புதிய படங்களை எதிர்பார்க்கலாம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top