‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்!

’96’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கைவசம் பாலாஜி தரணீதரனின் ‘சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’, ரஜினியின் ‘பேட்ட’, அருண்குமார் திரைப்படம், விஜய் சந்தர் திரைப்படம் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையில் நிற்கிறது.

இந்நிலையில், ‘சீதக்காதி’ இம்மாதம் 20ஆம் திகதியும், ‘பேட்ட’ பொங்கலுக்கும் வெளியாகவுள்ளது.
 
இந்தநிலையில், நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சின்னத்திரையில் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளாராம். தற்போது, இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் இது குறித்த மேலதிக அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top