சசிகுமாரின் அடுத்த பட டைட்டில்!

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில்!

சசிகுமாரை வைத்து 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் மீண்டும் நடித்துள்ள 'கொடிவீரன்' படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போனது. எனவே, இந்த மாதம் 30-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

வழக்கமாக சசிகுமார், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடுவார். 'கொடிவீரன்' படத்தை முடித்துவிட்ட நிலையில் சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'அசுரவதம்'. 'சென்னை உங்களை வரவேற்கிறது' படத்தை இயக்கிய எம்.மருதுபாண்டியன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ என்ற படநிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார்.

இதுவரை சொந்த பேனரில் நடித்து வந்த சசிகுமார் இந்தப் படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top