சமுத்திரகனியின் 'சங்கத்தலைவன்' அப்டேட்

சமுத்திரகனியின் \'சங்கத்தலைவன்\' அப்டேட்

சமுத்திரகனி நடிப்பில் தயாராகியிருக்கும் 'சங்கத்தலைவன்' இம்மாதம் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'உதயம் NH4', 'புகழ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரான மணிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சங்க தலைவன்'. இப்படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கருணாஸ், மாரிமுத்து, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 
 
விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் 'சங்கத்தமிழன்' படத்தை ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, றொபட் சர்குணம் இசையமைத்திருக்கிறார். 
 
இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சொந்த பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இம் மாதம் 26 ஆம் தேதியன்று  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
சமுத்திரக்கனி சிவப்பு சிந்தனையாளராக நடித்திருக்கும் இப்படத்திற்கு திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top