வேம்புவாக சமந்தா... ஷில்பாவாக விஜய் சேதுபதி!

வேம்புவாக சமந்தா... ஷில்பாவாக விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை 'ஆரண்ய காண்டம்' புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஷில்பா என்று அறிவித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தியாகராஜன் குமாரராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் - நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர். இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

தற்போது, இப்படத்தில் சமந்தாவின் கேரக்டர் பெயர் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் சமந்தா வேம்பு என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதற்கான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top