ஜீவா நடித்த 83 வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜீவா நடித்த 83 வெளியீட்டு தேதி அறிவிப்பு

பாலிவுட் நடிகர்களுடன் தமிழ் திரை உலக நட்சத்திர நடிகர் ஜீவா இணைந்து நடித்த '83: படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இந்திய துடுப்பாட்ட அணி 1983ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் '83'. இப்படத்தை இயக்குநர் கபீர் கான் தயாரித்து, இயக்கி உள்ளார். இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த கபில்தேவ் அவர்களது கதாபாத்திரத்தில், முன்னணி பொலிவுட் நட்சத்திரமான ரன்வீர் சிங் நடிக்க, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் தோற்றத்துக்கு ஏற்ப இந்தியா முழுவதும் பல்வேறு திரையுலகிலிருந்து நட்சத்திரங்கள் தெரிவுசெய்யப்பட்டு இதில் நடித்திருக்கிறார்கள். இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரரான தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி பொலிவூட் நடிகையான தீபிகா படுகோன், அமிர்தா பூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ப்ரீத்தம் மற்றும் ஜூலியஸ் பேகியாம் இசை அமைத்திருக்கிறார்கள். 
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகவில்லை. டிஜிற்றல் தளத்திலும் வெளியாகவில்லை. தற்போது ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் பிவிஆர் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் '83 ' ஜூன் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் காரணமாக நடிகர் ஜீவாவின் ரசிகர்களும், ஐபிஎல் மற்றும் துடுப்பாட்ட ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top