அஜித்துடன் இணையும் ‘புலிமுருகன்’ தயாரிப்பாளர்!

அஜித்துடன் இணையும் ‘புலிமுருகன்’ தயாரிப்பாளர்!

சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் மூன்றாவது படமான ‘விவேக’த்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்து வரும் இப்படத்தின் வியாபார விஷயங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை டோமிச்சனின் ‘முளகுபாடம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்தவர் டோமிச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விவேகம்’ படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் கதாநாயகிகளாக நடிக்கும் ‘விவேகம்’ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top