'எனிமி' படத்தில் ஆர்யாவின் தோற்ற புகைப்படம் வெளியீடு

\'எனிமி\' படத்தில் ஆர்யாவின் தோற்ற புகைப்படம் வெளியீடு

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

'அரிமா நம்பி', 'இருமுகன்', 'நோட்டா: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'எனிமி'. இந்தப்படத்தில் விஷால், ஆர்யா கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ் தமன் இசை அமைக்கிறார். 
 
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' என்ற படத்திற்கு பிறகு விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இப்படத்தில் விஷாலின் ஃபர்ஸ்ட் லுக் இதற்கு முன் வெளியான நிலையில் தற்போது ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
 
ஃபர்ஸ்ட் லுக்கில் கையில் விலங்குடன், முகத்தில் காயத்துடன், ஆக்ரோஷமான தோற்றத்தில் ஆர்யா தோன்றுவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top