அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா  நடித்துவரும் ‘விசுவாசம்“ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் 4ஆவது முறையாக நடித்து வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.
 
மேலும் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
 
இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றார். இவருடன் சேர்ந்து தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பொங்கல் தினத்தன்று வெளியிடயிருப்பதாக திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. குறித்த மோஷன் போஸ்டரில், விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

 

Tags: Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top