மெர்சலோடு போட்டிபோடும் கொடிவீரன்!

மெர்சலோடு போட்டிபோடும் கொடிவீரன்!

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில் இதே தினத்தில் இன்னொரு பிரபல நடிகரான சசிகுமாரின் 'கொடிவீரன்' வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதுகுறித்த விளம்பர போஸ்டரில் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், மஹிமா நம்பியார், சானுஷா, பாலா, பாலசரவனன், பூர்ணா உள்பட மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கதிர் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை சசிகுமாரின் கம்பெனி புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் மெர்சல், கொடிவீரன் தவிர நயன்தாராவின் 'அறம்' மற்றும் மோகன்லால்-விஷாலின் 'வில்லன்' ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top