களத்தில் சந்திப்போம் ஜனவரி 28 முதல் திரையரங்குகளில் வெளியீடு !

களத்தில் சந்திப்போம் ஜனவரி 28 முதல் திரையரங்குகளில் வெளியீடு !

ஆர். பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் "களத்தில் சந்திப்போம்". ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க. N ராஜசேகர் இயக்குகிறார். 

ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக " அப்பச்சி " என்ற வித்யாசமான வேடத்தில்  ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி ,ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 

இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். 

"களத்தில் சந்திப்போம்"  படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக  உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை ,அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் திரைக்கு வர இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வருகின்ற (தைப்பூசம் ) ஜனவரி 28 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top