அதிகாரப்பூர்வமாக டுவீட்டரில் நுழைந்தார் மடோனா!

அதிகாரப்பூர்வமாக டுவீட்டரில் நுழைந்தார் மடோனா!

2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். திலீப்புடன் மலையாளத்தில் 'கிங் லையர்', நாகசைத்தன்யாவுடன் 'ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் நடித்த மடோனா, சமீபத்தில், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 'கவண்' படம் வெளியானது.

இதற்கிடையில், சமூக வலைதளமான டுவிட்டரில் மடோனா பெயரில் ஏற்கெனவே ஏகப்பட்ட போலி அக்கவுண்ட் புழக்கத்தில் உள்ளன. மடோனாவின் பெயரில் இருப்பதால் அவற்றை உண்மையான ஐடி என்று எண்ணி பல ரசிகர்கள் அதை எல்லாம் பாலோ பண்ணி வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய பெயரில் உலா வரும் போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் நுழைந்துள்ளார் மடோனா. @MadonnaSebast14 என்ற தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலிருந்து முதல் டுவிட்டையும் பகிர்ந்துள்ளார்.

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top