கமலின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

கமலின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார். கமலஹாசன் கடந்த சில மாதங்களாக நடந்த தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்காகப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தன்னுடைய அரசியல் கட்சியின் வேலையில் முழு வீச்சில் செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் ஏப்ரல் 06-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் தற்போது ஒரு அமைதியான சூழல் இருந்து வருகிறது.

இதற்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார். இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசனைக் கதாநாயகனாக வைத்து விக்ரம் எனும் படத்தினை இயக்க உள்ளார். நடிகரும் மக்கல் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசனின் தேர்தல் பரப்புரை முடிந்ததை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இனி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top